ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகட்சியை கலைக்கப்போகிறேன் என்றாரா சீமான்?

கட்சியை கலைக்கப்போகிறேன் என்றாரா சீமான்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கட்சியை கலைக்கப்போகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கட்சியை கலைக்கப்போகிறேன் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 6 பேர் பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், “மக்களுக்காக போராடி பத்து ஆண்டுகள் வீண்.  மக்கள் திருந்துவதாக இல்லை. நான் திருந்தப் போகிறேன், ஆம் கட்சியை கலைக்கப்போகிறேன்“ என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

கட்சியை கலைக்கப்போகிறேன் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

கட்சியை கலைக்கப்போகிறேன் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

கட்சியை கலைக்கப்போகிறேன் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: ‘ஊழலை விட பாஜக எதிர்ப்பே முக்கியமானது’ என்றாரா திருமாவளவன்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

கட்சியை கலைக்கப்போகிறேன் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்தனர்.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனை தொடர்புக் வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இத்தகவல் முற்றிலும் பொய்யானது என உறுதி செய்தார்.

Also Read: காவல்துறை தலைமை காவலர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவும் போலி புகார் கடிதம்!

Conclusion

கட்சியை கலைக்கப்போகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Thanthi Tv

Pakkkiyarajan, NTK

Tamilnadu Election Commission

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular