ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Check‘வான்கோழி’ புத்தகத்தை படித்தாரா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

‘வான்கோழி’ புத்தகத்தை படித்தாரா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வான்கோழி புத்தகத்தை படித்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். காலை உணவு திட்டம் குறித்த தகவல்களை கைக்கணிணி (Tablet Computer) வழியாக முதலமைச்சர் கண்காணித்த படத்தை எடிட் செய்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வான்கோழி என்பது மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய புதினமாகும். ஆபாச புதினம் என்று இப்புதினத்தை பரவலாக விமர்சிக்கும் நிலையில் அப்புதினத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வான்கோழி புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்ததாக வைரலாகும் புகைப்படம்.

X Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Fact Check/Verification

வான்கோழி புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படம் குறித்து கூகுள் லென்ஸ் வழியாக தேடினோம்.

இத்தேடலில் ’M.K.Stalin : என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல.. காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மாணவிகளுடன் உற்சாக உரையாடல்!’ என்று தலைப்பிட்டு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஆனால் அப்படத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கையில் வான்கோழி புத்தகம் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக கைக்கணிணி இடம்பெற்றிருந்தது.

வான்கோழி புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்ததாக வைரலாகும் புகைப்படம்.

தொடர்ந்து தேடுகையில் தமிழ்நாடு காலை உணவுத்திட்ட விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை CM DashBoard வழியாகக் கண்காணித்ததாக முதலமைச்சர் பதிவிட்ட எக்ஸ் பதிவில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அப்படத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் கையில் கைக்கணிணியே இடம்பெற்றிருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது உறுதியாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

  Also Read: டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததா?

Conclusion

வான்கோழி புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்ததாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். காலை உணவு திட்டம் குறித்த தகவல்களை கைக்கணிணி (Tablet Computer) வழியாக முதலமைச்சர்  கண்காணித்த படத்தை எடிட் செய்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from Hindustan Times Tamil, Dated July 15, 2024
X post from M.K.Stalin, Chief Minister of Tamilnadu, Dated July 15, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular