Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: வந்தே பாரத் ரயிலை சுத்தியல் மூலம் அடித்து உடைக்கும் நபர்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ பழுதடைந்த வந்தே பாரத் கண்ணாடியை அகற்றும்போது எடுக்கப்பட்டதாகும்.
வந்தே பாரத் ரயிலை அடித்து உடைக்கும் நபர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இந்த முக்கால் களுக்கு #வந்தேபாரத் ரயில் அரசு சொத்தை உடைக்க இவனுங்களுக்கு யார் உரிமை கொடுத்தது..! சுட்டு தள்ள வேண்டும் பன்றிகளைப்போல” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!
வந்தே பாரத் ரயிலை அடித்து உடைக்கும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோ குறித்த உண்மையை அறிய ஆராய்ந்தபோது India Today வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், Trains of India என்கிற X பயனாளியின் பதிவு ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில், “ No, He isn’t damaging the train but breaking an already damaged glass to replace it with a new one at maintenance depot, as the glass is glued tightly with the body it needs to be broken first.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, வந்தே பாரத் ரயிலில் பழுதடைந்த கண்ணாடிகளை உடைத்து அகற்றி புதிய கண்ணாடி மாற்றும் மற்றொரு வீடியோவையும் இணைத்திருந்தனர். இந்தியா டுடே கட்டுரையின்படி அந்த வந்தே பாரத் ரயில் கண்ணாடியை அகற்றும் பணி குஜராத்தில் நடைபெறும் காட்சி என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வைரல் வீடியோவில் ஏற்கனவே அந்தக் கண்ணாடி பழுதடைந்திருந்ததும் தெளிவாகத் தெரிந்தது.
தொடர்ந்து, இந்த வீடியோ குறித்த உண்மையை அறிந்துகொள்ள Western Railways அகமதாபாத்தைச் சேர்ந்த பிரதீப் சர்மா என்கிற மூத்த மக்கள் தொடர்பு அதிகாரியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது அவர், “சமூக வலைத்தளங்களில் வந்தே பாரத் ரயில் சேதப்படுத்தப்படுவதாகப் பரவும் வீடியோ உண்மையில் அகமதாபாத்-மும்பை வந்தே பாரத் ரயிலில் பழுதடைந்த கண்ணாடியை சரிசெய்ய அதனை அகற்றியபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். அழுத்தமான கண்ணாடியால் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ஜன்னல் கண்ணாடிகளில் பழுது ஏற்படும்போது அது சுத்தியல் மூலமாக முழுவதுமாக உடைத்து நீக்கப்படும். ஒரு ஒப்பந்த ஊழியர் அப்பணியில் ஈடுபட்டிருக்கும்போது மற்றொரு ஊழியர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். ரயில்வே பணிகளின்போது வீடியோவிற்கு தடை இருக்கும் நிலையில் இந்த வீடியோவை எடுத்த பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று விளக்கமளித்துள்ளார்.
Also Read: திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!
வந்தே பாரத் ரயிலை அடித்து உடைக்கும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையில்லை. அவர் குறிப்பிட்ட ரயிலில் பழுதடைந்த கண்ணாடியை உடைத்து நீக்கும் காட்சி இது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from India Today, Dated September 13, 2024
Conversation With Pradeep Sharma, PRO, Western railways, Ahmedabad
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 3, 2025
Ramkumar Kaliamurthy
May 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 21, 2024