Fact Check
வந்தே பாரத் ரயிலில் ராமர் படம்; வைரலாகும் படம் உண்மையானதா?
Claim
வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் வரையப்பட்டுள்ளது.
Fact
அப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமர் படம் வரையப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறினாரா?
Fact Check/Verification
வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் வரையப்பட்டுள்ளதாக பரவும் படத்தில் ‘@The Rail Pilot’ எனும் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் ‘the_rail_pilot’ எனும் பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் படம் மே 26, 2025 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் இப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து Hive Moderation, Sightengine உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு படங்களை கண்டறியும் இணையத்தளங்களில் வைரலாகும் படத்தை பரிசோதித்தோம். அதில் இப்படம் 96 சதவீதம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என பதில் வந்தது.


Also Read: பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் தாக்கியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் வரையப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post by ‘the_rail_pilot’
Hive Moderation
Sightengine