பெட்ரோல், டீசலில் கிடைக்கின்ற வருவாயை பாஜக அரசு ராமர் கோவில், அனுமன் சிலை போன்ற இந்தியாவின் வளர்ச்சிப் பணிகளுக்காகத்தான் செலவிடுகிறது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மாநிலங்கள் வாட் வரியை குறித்து பெட்ரோல், டீசல் விலை குறைய வழிவகை செய்யவேண்டும் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “பெட்ரோல், டீசலில் வரும் வருவாயை பாஜக அரசு வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. ராமர் கோவில், அனுமன் சிலை அமைப்பு போன்ற இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளுக்கு தான் செலவிடுகிறது” என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
பெட்ரோல், டீசலில் வரும் வருவாயை பாஜக அரசு ராமர் கோவில், அனுமன் சிலை போன்ற இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளுக்குதான் செலவிடுகிறது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அதன்முடிவில், ஏப்ரல் 28 ஆம் தேதியான நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல், டீசல் மீதான வருவாயை நாங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
ஆனால், இதுகுறித்த செய்தியை பிபிசி நியூஸ் வெளியிட்டு இருக்கவில்லை. அவர்களுடைய நியூஸ்கார்டினை போலியாக உபயோகித்து இந்த வைரல் கார்டினை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல் குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், ”இது போலியாக பரவுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த நியூஸ்கார்டில் உள்ள செய்தி குறித்து எம்.எல்.ஏ வானதி சீனிவாசனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “இவ்வாறு நான் கூறவில்லை. இது போலியானது. என்னுடைய கூற்றை திரித்து பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார்.
Conclusion
பெட்ரோல், டீசலில் வரும் வருவாயை பாஜக அரசு ராமர் கோவில், அனுமன் சிலை போன்ற இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளுக்குதான் செலவிடுகிறது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False/Fabricated
Our Sources
Thanthi Tv
Vanathi Srinivasan MLA
CTR Nirmal Kumar, BJP
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)