சீமானை போல் திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“சீமானைப் போல் திமுகவை எதிர்ப்பதற்கு எங்க கட்சியில் உள்ள தலைவருக்கு ஆண்மை இல்லை” என்று திருமாவளவன் குறித்து வன்னி அரசு பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனைப் பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



Also Read: திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
சீமானை போல் திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்று வன்னி அரசு கூறியதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் இத்தகவல் யூ டூ புரூட்டஸ் எனும் ஆன்லைன் ஊடகத்தின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை யூ டூ புரூட்டஸ் வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
“சீமானை போல நான் ஒன்னும் மாமனார் சொத்தில் வாழவில்லை” என்று வன்னி அரசு கூறியதாக யூ டூ புரூட்டஸ் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
உண்மையான புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட புகைப்படச் செய்தி
மேலும் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என யூ டூ புரூட்டஸும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து வன்னி அரசு அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர்,
“இத்தகவல் பொய்யானது, மாற்றுக் கட்சி பரப்பும் அவதூறு”
என்று பதிலளித்தார்.
Also Read: கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
Conclusion
சீமானை போல் திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்று வன்னி அரசு கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Vanni Arasu, Deputy General Secretary, VCK
U2Brutus
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)