Fact Check
RSS நபர் ஒருவர் அமெரிக்க தேவாலயத்திற்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?
Claim
அமெரிக்க தேவாலயத்திற்குள் நுழைந்து சேதம் விளைவித்த RSS நபர்
Fact
வைரலாகும் நிகழ்வு கடந்த பிப்ரவரியில் வாடிகனில் நடைபெற்ற நிகழ்வாகும்.
RSS நபர் ஒருவர் அமெரிக்க தேவாலயத்திற்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” உலகளாவிய ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் சங்கிஅமைப்பை சேர்ந்தவன் தேவாலயத்தில் சிலைகளை உடைக்கும் பொழுது பிடிபட்டான்” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீடு; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?
Fact Check/Verification
RSS நபர் ஒருவர் அமெரிக்க தேவாலயத்திற்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 08, 2025 அன்று ”Man damages candelabra after jumping onto Vatican altar; watch video” என்கிற தலைப்பில் The Indian Express வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதன்படி, ருமேனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் வாடிகன் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நுழைந்து பல ஆயிரம் டாலர்கள் மதிப்புடைய மெழுகுவர்த்தி தாங்கியை சேதப்படுத்தியதாக செய்தி இடம்பெற்றிருந்தது.

இச்செய்தியானது, NDTV, Daily Mail, CNN உள்ளிட்ட ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட நிகழ்வே தற்போது அமெரிக்காவில் RSS நபர் ஒருவர் தேவாலயத்திற்குள் புகுந்து சேதம் விளைவித்ததாகப் போலியாக பரவி வருகிறது.

Also Read: திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
RSS நபர் ஒருவர் அமெரிக்க தேவாலயத்திற்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
News Report From, The Indian Express, Dated February 08, 2025
News Report From, NDTV, Dated February 09, 2025