Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சாலையில் செல்லும் பசுக்களை வாகனங்கள் கடந்து செல்லக்கூடாது என்று ஆணையிட்டார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா.
இத்தகவல் தவறானதாகும். சாலையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற பசுக்களுக்கு தகுந்த பாதுகாப்பான புகலிடம் அமைத்து தருமாறே ரேகா குப்தா உத்தரவிட்டார்.
“பாஜக ஆட்சி செய்யும் தலைநகர் டெல்லியில்.. பசுமாடுகள் சாலையில் செல்வதால் வாகனங்கள் யாரும் அதை தொந்தரவு செய்யக்கூடாது அதை கடந்து செல்லக்கூடாது என்று டெல்லி மாநில முதலமைச்சர் ஆணையிட்டார்.. பைத்தியக்காரனுங்க கையில ஆட்சிய கொடுத்தா இப்படித்தான் இருக்கும்” என்று குறிப்பிட்டி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்றாரா அன்வர் ராஜா?
சாலையில் செல்லும் பசுக்களை வாகனங்கள் கடந்து செல்லக்கூடாது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆணையிட்டதாக பரப்பப்படும் வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ஹைதர்பூர் மேம்பாலத்தில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற பசுக்களுக்கு தகுந்த புகலிடம் அமைத்து தருமாறு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறி ANI ஊடகம் வைரலாகும் வீடியோவுடன் அதன் எக்ஸ் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் தினமலர், தினமணி, ஏசியாநெட் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களும் இதே தகவலுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கிலும் வைரலாகும் வீடியோவுடன் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவிலும் ஹைதர்பூர் மேம்பாலத்தில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற பசுக்களுக்கு தகுந்த புகலிடம் அமைத்து தருமாறு உத்தரவிடப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்றாரா செம்மலை?
சாலையில் செல்லும் பசுக்களை வாகனங்கள் கடந்து செல்லக்கூடாது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆணையிட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் சாலையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற பசுக்களுக்கு தகுந்த பாதுகாப்பான புகலிடம் அமைத்து தருமாறே ரேகா குப்தா உத்தரவிட்டார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post br Rekha Gupta, Chief Minister of Delhi, Dated March 26, 2025
Report by ANI, Dated March 26, 2025
Report by Dinamani, Dated March 27, 2025,
Report by Dinamalar, Dated March 26, 2025
Report by Asianet News Tamil, Dated March 26, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 17, 2025