Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: தமிழகத்தில் காவல்துறையின் பரிதாப நிலை
Fact: வைரலாகும் வீடியோவில் காவலர் தாக்கப்படும் நிகழ்வு ஆந்திராவில் நடைபெற்றதாகும்.
தமிழகத்தில் காவல்துறையின் நிலை என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”என்னடா தமிழ்நாட்டுல போலிஸ்க்கே இதான் நிலமையாடா….அப்போ சாதாரண மக்களின் நிலை….???” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?
Fact Check/Verification
தமிழகத்தில் காவல்துறையின் நிலை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து தேடியபோது rkagninews என்கிற ஊடகப்பக்கத்தில் இதுகுறித்த செய்தி வெளியாகியிருந்தது.
அதன்படி, ஆந்திர மாநிலம் கூடுரில் தலைமைக்காவலராக பணியாற்றும் சுவாமிதாஸ் தேநீர் அருந்த அக்கடைக்கு வந்த நிலையில் அவரை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லல்துக் என்கிற நபர் கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த சுவாமிதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட நபரும் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
World of India, India Today உள்ளிட்ட ஊடகப்பக்கங்களிலும் இதுகுறித்த செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட வீடியோவே தற்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டதாகப் பரவி வருகிறது.
Also Read: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் 2022ஆம் ஆண்டு வீடியோ!
Conclusion
தமிழகத்தில் காவல்துறையின் நிலை என்று பரவும் வீடியோ ஆந்திராவைச் சேர்ந்தது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from India Today, Dated July 20, 2024
Report from RK Agni news, Dated July 18, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.