Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: தீபாவளியை முன்னிட்டு மலேசிய அரசு விழிப்புணர்வு வீடியோ
Fact: வைரலாகும் வீடியோ இந்தோனோசியாவைச் சேர்ந்தது; தீபாவளியுடன் தொடர்புடையது இல்லை.
தீபாவளியை முன்னிட்டு மலேசிய அரசு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“சாதாரண தண்ணீரை விட சோப்புத் தூள் கலக்கப்பட்ட தண்ணீர் எப்படி பட்ட தீயாக இருந்தாலும் அது பற்றி எரியும் போது அது மற்ற இடங்களுக்கு பரவாமல் சுலபமாக அணைக்கும் என்று ஆய்வின் மூலம் கண்டறிந்து மலேசியா அரசு சார்பாக அந்நாட்டின் தீயணைப்புத்துறை வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இவ்வாறு விளக்கப்படம் வெளியிட்டுள்ளது” என்று இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தீபாவளியை முன்னிட்டு மலேசிய அரசு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்ட் 08ஆம் தேதியன்று Pemadam Kebakaran BP Batam என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. Doni Masrul என்பவர் இந்த பக்கத்தை இணைத்து இவ்வீடியோவை பதிவிட்டிருந்தார்.
Pemadam Kebakaran BP Batam என்கிற வார்த்தையை மொழிபெயர்த்து பார்த்தபோது எது இந்தோனேசிய மொழியில் BP Batam என்கிற இடத்தின் தீயணைப்பு துறையை குறிக்கிறது என்பதை அறிய முடிந்தது.
”எளிமையான முறையில் வீட்டில் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள்” என்பதாக இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. இந்தோனேசியாவின் Kota Batam என்கிற நகர தீயணைப்புத்துறையின் இந்த வீடியோவே தற்போது மலேசியாவில் தீபாவளிக்கான முன்னெச்சரிக்கை வீடியோ என்பதாகப் பரவி வருகிறது என்பது உறுதியாகியது.
Also Read: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசினாரா ஆர்.பி.உதயகுமார்?
Conclusion
தீபாவளியை முன்னிட்டு மலேசிய அரசு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook Post from, Doni Masrul, Dated August 08, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.