Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பின் காட்சி
வைரலாகும் நிகழ்வு உண்மையில் இந்தோனேசியாவின் மவுண்ட் சிமேரு எரிமலை வெடிப்பு காட்சியாகும்.
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பின் காட்சி என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இருளில் சூழும் இந்தியா. 10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை
இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும் எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும். இந்திய வானிலை ஆய்வு மையம்” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பின் காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது அது கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதலே சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றிருப்பதை நம்மால் அறிய முடிந்தது.
ஆனால், ஹேலி குப்பி எரிமலை எத்தியோப்பியாவில் நவம்பர் 23ஆம் தேதியன்றே வெடிக்கத் துவங்கியது.


தொடர்ந்து, இந்த வீடியோ காட்சியானது இந்தோனேசியாவில் அமைந்துள்ள மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்துச்சிதறிய காட்சிகள் என்பதாக இந்தோனேசிய செய்தி ஊடகங்களில் இந்த வீடியோ காட்சியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

The SUN என்கிற ஊடகத்தில் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்துச்சிதறிய காட்சிகள் குறித்த செய்தியில் கடந்த 19ஆம் தேதியன்றே இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

மேலும், Afar Communication Bureau வெளியிட்டுள்ள ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு காட்சிகளுடன் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள எரிமலை வெடிப்பு ஒத்துப்போகவில்லை என்பதையும் நம்மால் காண முடிந்தது.
குறிப்பிட்ட இந்தோனேசிய எரிமலை வெடிப்பு காட்சியே தவறுதலாக எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு காட்சி என்பதாக பரவுகிறது.
Also Read: பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பின் காட்சி என்று பரவும் வீடியோ இந்தோனேசியாவின் மவுண்ட் சிமேரு எரிமலை வெடிப்பு காட்சி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, Nanana365, Dated November 20, 2025
X Post From, Intel Net, Dated November 19, 2025
Report from, Aljazeera, Dated November 25, 2025
Report from, The US SUN, Dated November 19, 2025
Facebook post by WestPacWX, Dated November 19, 2025
Facebook Post by, Afar Communication Bureau, Dated November 24, 2025