Fact Check
விஜய் – அண்ணாமலை சந்திப்பு; வைரலாகும் படம் உண்மையானதா?
Claim
விஜய் – அண்ணாமலை சந்திப்பு என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

Also Read: 2026 தேர்தல் தொடர்பாக உதயநிதி-அண்ணாமலை ரகசிய சந்திப்பு; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Fact
விஜய் – அண்ணாமலை சந்திப்பு என்று புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் படத்தின் உண்மையான படம் பிப்ரவரி 05, 2022 அன்று பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்படத்தில் விஜயுடன் இருந்தது அண்ணாமலை அல்ல, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆவார்.

இதனடிப்படையில் பார்க்கையில் விஜய் – அண்ணாமலை சந்திப்பு என்று குறிப்பிட்டு வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு, ரங்கசாமிக்கு பதிலாக அண்ணாமலையின் படம் மாற்றப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

Also Read: தந்தையும் மகனும் ஒரே பெண்ணை மணந்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Result: Altered Photo
Sources
X post from Anand, General Secretary, TVK, Dated Februaru 05, 2022
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.