வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact Checkதியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்.

Fact: இத்தகவல் தவறானதாகும். மகாராஷ்டிராவில் சல்மான் கான் ரசிகர்கள் பட்டாசு வெடித்த வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் சென்ற வாரம் வியாழக்கிழமை (செப்டம்பர் 05) திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தை காண வந்த விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்.

X Link | Archive Link

தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்.

X Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!

Fact Check/Verification

விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் Video: Salman Khan’s ‘Tiger 3’ On Screen, Firecrackers Inside Theatre என்று தலைப்பிட்டு நவம்பர் 13, 2023 அன்று NDTV வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்.
NDTVயில் வெளிவந்த செய்தி

இச்செய்தியில் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மலேகான் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் சல்மான் கான் ரசிகர்கள் பட்டாசு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சல்மான் நடிப்பில் வெளிவந்த டைகர் 3 திரைப்படம் திரையிடப்பட்டபோது இச்சம்பவம் நடந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.  அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதையடுத்து தேடுகையில் சல்மான் கானும் இச்சம்பவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. “டைகர் 3 திரையிடப்பட்ட தியேட்டரில் பட்டாசு வெடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்தேன். இது ஆபத்தானது. நமக்கும் மற்றவருக்கும் ஆபத்து விளைவிக்காமல் திரைப்படத்தை காணுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

 Also Read: திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததாக பரவும் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் சென்ற வருடம் மகாராஷ்டிராவில் சல்மான் கான் ரசிகர்களால் நடத்தப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from NDTV, Dated November 13, 2023
X post from Actor Salman Khan, Dated November 13, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular