Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தவெக தலைவர் விஜய் மாணவியிடம் அத்துமீறினார்
Fact: மாணவி கைகோர்த்தப்படி புகைப்படம் எடுக்க தோளிலிருந்து கை எடுத்ததை வைத்து இத்தகவல் பரப்படுகின்றது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
இவ்விழாவில் மாணவி ஒருவரிடம் விஜய் அத்துமீறியதாக கூறி வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது. அவ்வீடியோவில் மாணவியின் தோளில் விஜய் கைபோட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும்போது அம்மாணவி தோளிலிருந்து விஜயின் கையை எடுப்பதாக இருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகிறேன் என்றாரா விஜய்?
தவெக தலைவர் விஜய் மாணவியிடம் அத்துமீறியதாக கூறி பரப்பப்படும் வீடியோவில் நியூஸ் தமிழின் லோகோ இடம்பெற்றிருப்பதால் அந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘தோள் மீது ‘விஜய்’ கை போட்டு போட்டோ எடுக்கும்போது மாணவி செய்த செயல்!’ என்று தலைப்பிட்டு அவ்வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் தோளிலிருந்து கையெடுத்த மாணவி, தொடர்ந்து அவருடன் கைக்கோர்த்தபடி புகைப்படத்திற்கு காட்சி கொடுக்கும் காட்சியை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் பாலிமர் நியூஸில் நேற்று வெளியிடப்பட்ட நேரலையில் இக்காட்சி இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. நேரலை வீடியோவின் 02:07:30 நேரத்தில் அம்மாணவி மேடைக்குள் வருவதையும், அவருக்கு விஜய் சால்வை போடுவதையும், தொடர்ந்து அவருக்கு சான்றிதழ் தந்து புகைப்படம் எடுக்கும்போது அம்மாணவியின் வேண்டுகோளுக்கிணங்கி அம்மாணவி மற்றும் அவர் கூட வந்த மற்றொரு பெண்ணின் கைகளை கோர்த்தப்படி விஜய் புகைப்படத்திற்கு காட்சி கொடுப்பதையும் காண முடிந்தது.
தொடர்ந்து இவ்வீடியோவை ஆய்வு செய்கையில் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றொர்களின் தோளில் கைப்போட்டப்படி விஜய் புகைப்படம் எடுப்பதை காண முடிந்தது. இதுத்தவிர்த்து சிலரின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் விருப்ப போஸில் விஜய் புகைப்படம் எடுத்ததையும் காண முடிந்தது.
Also Read: ‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று அட்டைப்படம் வெளியிட்டதா ஆனந்த விகடன்?
தவெக தலைவர் விஜய் மாணவியிடம் அத்துமீறியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். அம்மாணவி தோளிலிருந்து கையெடுத்து, அதன்பின்னர் கைக்கோர்த்தபடி அம்மாணவி புகைப்படத்திற்கு காட்சியளித்த வீடியோவில் பாதியை மட்டும் கத்தரித்து நீக்கிவிட்டு இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
இந்த உண்மையை உரிய ஆதாரங்கள் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X post from News Tamil, Dated June 26, 2024
YouTube Video from Polimer News, Dated June 26, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 4, 2025
Ramkumar Kaliamurthy
June 2, 2025
Ramkumar Kaliamurthy
May 13, 2025