ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckXBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகைகளை காட்டிலும் கொடிதானதா?

XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகைகளை காட்டிலும் கொடிதானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகை கொரானா வைரஸ்களை காட்டிலும் மிகவும் கொடிதானது என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

XBB ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று நம் அண்டை நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் பரவி வருகின்றது.

இந்நிலையில், இந்த புதிய வகை XBB ஒமிக்ரான் கொரானாவின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்று கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வைரலாகும் அத்தகவலில், புதிய வகை XBB ஒமிக்ரான் வைரஸ்  டெல்டா வைரஸைக் காட்டிலும் 5 மடங்கு ஆபத்தானது என்றும், இதில் இறப்பு அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸின் அறிகுறிகளாக மூட்டு வலி, தலைவலி, கழுத்தில் வலி, மேல் முதுகு வலி, நிமோனியா, பசியின்மை போன்றவை இருக்கும் என்று  அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற கொரோனா வைரஸ் பாதிப்புகளின்போது ஏற்படும், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் குறுகிய காலத்தில் நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது. இதனால் கடுமையான சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்றெல்லாம் வைரலாகும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Viral WhatsApp Forward On XBB Variant Has No Basis In Facts
The viral WhatsApp forward on XBB variant received by Newschecker on our WhatsApp tipline

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஐஸ்லாந்து பெண்களை மணக்கும் வெளிநாட்டவருக்கு மாதம் 3.5 லட்சம் வழங்குகின்றதா ஐஸ்லாந்து அரசு?

Fact check/Verification 

XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகை கொரானாவை வைரஸை காட்டிலும் மிகவும் கொடிதானது என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்று மத்திய சுகாரத்துறை மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

அதேபோல் ஜம்மு காஷ்மீரின் செய்தித் தொடர்புத் துறையும் வைரலாகும் இச்செய்தி தவறானது என்று டிவீட் செய்துள்ளது.

XBB வைரஸ் வகையானது ஆகஸ்ட் 13, 2022-ல் முதன்முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், முதற்கட்ட ஆராய்ச்சிகளில் இந்த வைரஸானது மற்ற வகைகளை விட வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று போதுமான தரவுகள் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகை கொரானா வைரஸ்களை காட்டிலும் மிகவும் கொடிதானது என்று பரவும் தகவல்
A screengrab of the WHO report

தொடர்ந்து தேடியதில்,  XBB வைரஸ் டெல்டா வைரஸைக் காட்டிலும் குறைந்த பாதிப்பை ஏற்படும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதை அறிய முடிந்தது. இதன்படி பார்க்கையில் XBB ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வைரஸைக் காட்டிலும் 5 மடங்கு ஆபத்தானது எனும் கூற்று தவறானது என்பது தெளிவாகின்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய மெடிக்கல் கவுன்சிலில் தொற்றுநோயியல் துறையின் முன்னாள் தலைவராக இருந்த டாக்டர் கங்ககேத்கரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் தகவல் தவறானது என்று அவர் உறுதி செய்தார்.

மேலும், வைரலாகும் தகவலில் குறிப்பிட்டிருப்பதுபோல் XBB வைரஸ் எந்த வித அறிகுறியும் காட்டாது. இது காய்ச்சல், இருமல் மற்றும் சிறிதளவு உடம்பு வலியை ஏற்படுத்தும். ஆனால் இந்த வகை டெல்டாவை விட ஆபத்தானதாக இருக்க வாய்ப்பே இல்லை.  XBB வைரஸ் குறைந்த அளவிலேயே மருத்துவமனை அனுமதிகளையும், இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிற்கு புதியதும் இல்லை என்று கங்ககேத்கர் கூறினார்.

Also Read: பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக பரவும் போலி புகைப்படம்!     

Conclusion

XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகை கொரானாவை வைரஸை காட்டிலும் மிகவும் கொடிதானது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)

Result: False

Our Sources

Tweet by Ministry of Health and Family Welfare, on December 22, 2022
Tweet by Information & PR, Kathua, on December 22, 2022
Press note by WHO on October 22, 2022
Conversation with Dr R Gangakhedkar, former head of epidemiology and communicable diseases at the Indian Council of Medical Research


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular