ஐஸ்லாந்து பெண்களை மணக்கும் வெளிநாட்டவருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக பரவும் போலி புகைப்படம்!
Fact Check/Verification
ஐஸ்லாந்து பெண்களை மணக்கும் வெளிநாட்டவருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானது என அறிய முடிந்தது. ஐஸ்லாந்து ஊடகங்களான Reykjavík Grapevine மற்றும் icelandmonitor 2016 ஆம் ஆண்டே இவ்வாறு ஒரு அறிவிப்பை ஐஸ்லேண்ட் அரசு வெளியிடவில்லை என்று உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
மேலும் இச்செய்தி குறித்து AFP வெளியிட்ட கட்டுரையில், ஐஸ்லேண்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இத்தகவல் பொய்யானது என்று உறுதி செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை பிரிவின் இணையத்தளத்தை ஆய்வு செய்ததில், ஐஸ்லேண்டில் பெண்களை விட ஆண்களின் சதவீதம் சற்று உயர்ந்து இருப்பதை அறிய முடிந்தது.


கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காணிகையில் ஐஸ்லாந்து பெண்களை மணக்கும் வெளிநாட்டவருக்கு மாதம் 3.5 லட்சம் ஐஸ்லேண்ட் அரசு வழங்குவதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது புலனாகின்றது.
Also Read: உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் தவறான வீடியோ!
Conclusion
ஐஸ்லாந்து பெண்களை மணக்கும் வெளிநாட்டவருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Articles from eykjavík Grapevine, icelandmonitor and AFP
data.worldbank.org
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)