வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

HomeFact Checkஇது மன்னர் ராணா பிரதாப்பின் 50கிலோ போர்வாளா ! உண்மை என்ன ?

இது மன்னர் ராணா பிரதாப்பின் 50கிலோ போர்வாளா ! உண்மை என்ன ?

உரிமைகோரல் :

இது மொகலாயர்களை கதறவிட்ட மஹாராஜா ராணா ப்ரதாப் அவர்களின் போர்வாள். இதன் எடை 50 கிலோ.!தன் எதிரி நிராயுதபாணியாகி விட்டால் அவர்களிடம் ஒரு வாளை கொடுத்து போர் புரிய சொல்வாராம் ராணா மஹாராஜ்.

தர்மத்தின் வழி நின்ற பேரரசன்..!

இவைகள் எதுவும் இந்திய வரலாற்று பாட புத்தகங்களில் இடம்பெற வில்லை..!

அதிகமாகப் பகிர்ந்து நாம் நமது வரலாற்று மாவீரர்களைப் பற்றி உலகரியச்செய்வோம்….

https://www.facebook.com/photo.php?fbid=1514628975376864&set=gm.2803184689900078&type=3&theater&ifg=1

சரிபார்ப்பு :

இந்திய நிலப்பரப்பு ஒற்றுப்பட்ட பகுதியாக மாறுவதற்கு முன்பு வரை நூற்றுக்கணக்கான மன்னர்கள் சிறு சிறு பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். கிபி1572-97 வரை மேவார் பகுதியை ராஜ்புட் அரசர் ராணா பிரதாப் ஆட்சி செய்து வந்துள்ளார். இவர் மகாராணா பிரதாப் என்றும் அழைக்கப்பட்டார். அவர் ஆட்சி செய்தது தற்போதைய வடமேற்கு இந்திய மற்றும் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாக அமைந்து இருந்தது.

அக்பர் தங்கள் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியை எதிர்த்து போரிட்டதால் ராஜஸ்தானில் பெரிய ஹீரோவாக மரியாதை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மகாராணா பிரதாப் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.இந்த வாளில் கைப்பிடி பகுதியில் அரபியில் உள்ளது போன்ற எழுத்துக்கள் இருந்தன. இதனால் உண்மையில் இந்த படம் மஹா ராணா பிரதாப் வாள்தானா என்ற சந்தேகம் வந்தது.இதன் உண்மைத்தன்மையை   நியூஸ்செக்கரில் அரியத் தொடங்கினோம் .

உண்மைத் தன்மை :

வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் histoireislamique எனும் இஸ்லாமிய வரலாறு குறித்த இணையதளத்தில் இப்புகைப்படம் பதிவாகி இருந்தது.அதில் ,இது ஸ்பெயின் நாட்டின் கடைசி இஸ்லாமிய மன்னரும், கிரனாடாவின் 12-வது அபு அப்துல்லா முகமது உடைய வாள் என்பதை அறிய முடிந்தது.ஆனால் இந்த வாள் 1400-ல் உருவாக்கப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://histoireislamique.wordpress.com/2015/03/03/les-derniers-sultans-nasrides-de-grenade-et-fin-de-lislam-en-andalousie/sword-and-scabbard-of-boabdil-muhammad-xii-nasrid-granada-c-1400/

தொடர்ந்து தேடியபோது எக்கனாமிக் டைம்ஸ் இணையதள பக்கத்தில் செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ராணா பிரதாப் எப்போதும் இரண்டு வாள்களை வைத்திருப்பார். ஒவ்வொன்றும் 25 கிலோ எடை கொண்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

https://economictimes.indiatimes.com/magazines/panache/slice-of-history-legendary-swords-and-the-kings-who-brandished-them/the-double-swords-of-mewar/slideshow/64170482.cms

மேலும், ராணா பிரதாப் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது படத்தை அதில் பயன்படுத்தியிருந்தனர்.அதில் ராணா பிரதாப் ஓவியம் மற்றும் போர்க்கருவிகள் இருந்தன. ராணா பிரதாப்பின் வாள் சற்று வளைந்தபடி இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள வாளே நேராக உள்ளது.  இதன் மூலம் இந்த வாள் ராணா பிரதாப்புடையது இல்லை என்பது தெளிவானது.

முடிவுரை :

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் மகாராணா பிரதாப் உடைய 50 கிலோ எடை கொண்ட போர்வாள் என வைரல் செய்யப்படும் புகைப்படம் ஸ்பெயின் நாட்டின் கடைசி இஸ்லாமிய மன்னரின் போர்வாள் என்று தெரியவந்து உள்ளது .

Sources

  • Google Search
  • Facebook
  • You Tube
  • Newspaper

Result: False  

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular