ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckViralமுன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு!

முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மனோ தங்கராஜ் ஒரு பெண்ணுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம்.

Fact: வைரலாகும் புகைப்படத்தில் அவருடன் கூடவே வேறு குடும்பத்தினரும் அந்த பிறந்தநாள் விழாவில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனியாக ஒரு பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடியதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

“திமுக அமைச்சர் எதோ பிறந்தநாள் விழா கொண்டாடி இருப்பார் போல….!வீடியோ இருந்தா நல்லா இருக்கும்…!” என்பதாக இந்த புகைப்படங்கள் பரவி வருகின்றன. அதில், அந்த இளம்பெண்ணுக்கு மனோ தங்கராஜ் மாலை அணிவிப்பது, கேக் ஊட்டுவது போன்ற தனியான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Screenshot from X @Mahi1987Mass

X Link/Archived Link

Screenshot from X @KannaPandiyaSKP

X Link/Archived Link

Screenshot from Facebook/jeyan.thangaraj.1

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?

Fact Check/Verification

முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனியாக ஒரு பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடியதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள இளம்பெண் குறித்தும், சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற புகைப்படங்கள் குறித்தும் மனோ தங்கராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டில் நடைபெற்ற என் மகள் போன்ற குடும்ப உறவினர் பெண்ணின் பிறந்தநாள் விழா அது. இதுகுறித்து முதலில் அவதூறு பரப்பியவரின் பிள்ளைகளும் அந்தப்பெண்ணை அறிவார்கள்.  

அந்த விழாவில் நான் மட்டுமின்றி என் குடும்பத்தினர் வேறு சிலரும் இருந்தனர். ஆனால், நான் அப்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மட்டும் தவறான நோக்கில் பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார். (அப்பெண்ணின் பெயர் மற்றும் மற்ற தகவல்கள் அவருடைய நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்படவில்லை).

மேலும், அதுதொடர்பான மற்ற உறவினர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படங்களையும் நமக்கு அனுப்பி வைத்தார்.

 Also Read: உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தாரா விஜய்?

Conclusion

முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனியாக ஒரு பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடியதாகப் பரவும் தகவல் அவதூறு பரப்பும் வகையில் பரவி வருகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Phone Conversation with, Ex Minister Mano Thangaraj, Dated October 01, 2024
Photos from Mano Thangaraj


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular