ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபுதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தினரா?

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தினரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ

Fact: இத்தகவல் தவறானதாகும். சத்தீஸ்கரில் போலி சான்றிதழ்களை பயன்படுத்தி அரசு வேலையில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடந்த போராட்டமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.

புதிய குற்றவியல் சட்டத்தில் “ஹிட் அண்ட் ரன்” குறித்து புதிய திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இச்சட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ

Instagram Link | Archived Link

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர்வரிசை என்று பரவும் நொய்டா வீடியோ!

Fact Check/Verification

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.

இதில் “These 29 nude men of Chhattisgarh are going viral, here is why!!!!” என்று தலைப்பிட்டு ஜூலை 19, 2023 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில் வைரலாகும் இதே வீடியோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ
Screengrab from Times of India

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் போலி சான்றிதழ்களை பயன்படுத்தி அரசு வேலையில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞர்கள் போராட்டம் நடத்தியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Also Read: அயோத்தியில் 25,000 ஹோமகுண்டங்கள் என்று பரவும் வாரணாசி வீடியோ!

Conclusion

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ தவறானதாகும். சத்தீஸ்கரில் போலி சான்றிதழ்களை பயன்படுத்தி அரசு வேலையில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடந்த போராட்டமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Times Of India, Dated July 19, 2023
Report from News18 MP Chhattisgarh, Dated July 18, 2023
Report from Hindustan Times, Dated July 18, 2023
Report from The Hindu, Dated July 19, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular