வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஸ்டெர்லைட் ஆலையை துவக்கி வைத்தது கருணாநிதியா?

ஸ்டெர்லைட் ஆலையை துவக்கி வைத்தது கருணாநிதியா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் குறித்து பரவும் தகவல்.

Fact Check/Verification

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவமும் ஒன்று. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடைப்பெற்று வந்தது.

இப்போராட்டத்தின் 100-ஆவது நாளான 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவமானது தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கியது. இதன்பின் மே 28, 2018 அன்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.

இதன்பின் தமிழகத்தின் முக்கியமான இரு கட்சிகளாக விளங்கும் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே எப்போது விவாதம் வரும்போதும், ஸ்டெர்லைட் சம்பவம் ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு, கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பெற்றது என்கிற தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

வைரலாகும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்துத் தேடினோம்.

நம் தேடலில் The News minute இணையத்தளத்தில் “History of Sterlite in Thoothukudi: A story of betrayal by crony regulators” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.

அதில், 1992 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி பகுதியில்  ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இந்தச் செம்பு உருக்காலையைத் தொடங்க முதலில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், சுற்றுச்சூழல் மாசு காரணமாக 1993 ஆம் ஆண்டு அந்த அனுமதி மறுக்கப்பட்டதென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின்பு, அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளே அந்நிறுவனம் தமிழகத்தில் காலடி வைத்து, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்திற்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டதென்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டெர்லட் குறித்து வந்தக் கட்டுரை.

மேற்கண்ட கட்டுரையின்படி பார்த்தால், 1994 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில்  அதிமுக இருந்தது.  முதல்வராக ஜெயலலிதா இருந்தார். ஆகவே வைரலாகும் தகவலில் இருப்பதுபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு கருணாநிதி அவர்கள் அடிக்கல் நாட்டிருக்க வாய்ப்பே இல்லை.

மேலும் இத்தகவலை மேலும் உறுதி செய்ய வைரலாகியப் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில் வைரலானப் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்கிற உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில் ஸ்டெர்லைட் அடிக்கல்  நாட்டு விழாவில் கலந்துக்கொண்டவர் அப்போது தமிழகத்திற்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களேயாவார். வைரலானப் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்தபோது உண்மையானப் புகைப்படம் நமக்கு கிடைத்தது. இதன் மூலமே இந்த உண்மை நமக்குத் தெரிய வந்தது.

அப்புகைப்படத்தை வாசகர்களின் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலை துவக்க விழா.

மேலும் வாசகர்களின் புரிதலுக்காக எடிட் செய்யப்பட்டப் படத்தையும், உண்மையானப் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

நம் விரிவான விசாரணைக்குப்பின் நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால், வைரலானப் புகைப்படத்தில் இருபதுபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு  அடிக்கல் நாட்டியவர் கருணாநிதி இல்லை. உண்மையில் அதைச் செய்தவர் ஜெயலலிதா ஆவார்.

இதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் வைரலாகும் இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Result: Fabricated

Our Sources

Twitter Profile: https://twitter.com/Jagan_ADMK/status/1323867009004707840

Twitter Profile: https://twitter.com/Sathiya89703492/status/1324204851354431489

The News Minute: https://www.thenewsminute.com/article/history-sterlite-thoothukudi-story-betrayal-crony-regulators-78481

Twitter Profile: https://twitter.com/Pugazh1317/status/1323830924467867648


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular