Monday, April 21, 2025

Coronavirus

முதல் தடுப்பூசி தூய்மை பணியாளருக்கு செலுத்தப்பட்டதா?

banner_image

தமிழகத்தில் முதல் கொரானா தடுப்பூசி தூய்மை பணியாளரான முத்துமாரி என்பவருக்கு செலுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தடுப்பூசி குறித்து பரவும் செய்தி

Fact Check/ Verification

உலகையே அச்சுறுத்தி வந்த பெருந்தொற்றான கொரானாவுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு இன்று (16/01/2020) நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்வை பிரதமர் மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் கொரானா தடுப்பூசி முதன்முதலில் சுகாதாரப் பணியாளர் முத்துமாரி என்பவருக்கு செலுத்தப்படவிருப்பதாக நியூஸ் 7 தமிழ், ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

தடுப்பூசி குறித்து நியூஸ் 7 தமிழில் வந்தச் செய்தி
Source: Facebook

இச்செய்தியை அறிந்த நெட்டிசன்கள் இதுக்குறித்து தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து  நியூஸ்செக்கர் தமிழ் சார்பில்  ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

தமிழகத்தில் முதல் கொரானா தடுப்பூசி தூய்மை பணியாளரான முத்துமாரி என்பவருக்கு செலுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, இச்செய்தி உண்மைதானா என்பதை அறிய இச்செய்திக் குறித்து ஆராய்ந்தோம்.

அவ்வாறு ஆராய்ந்ததில் இச்செய்தியானது தவறானச் செய்தி என்று நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் தமிழகத்தில் முதல் கொரானா தடுப்பூசி மெடிக்கல் கவுன்சில் தலைவரான செந்தில் அவர்களுக்கே போடப்பட்டுள்ளது.

இதுக்குறித்த செய்தி தினகரனில் வெளிவந்துள்ளது.

Source: Twitter

இரண்டாவதாக IMA தலைவர் ஜெயலால் அவர்களுக்கும், மூன்றாவதாக சுகாதாரப் பணியாளர் முத்துமாரி அவர்களுக்கும் போடப்பட்டுள்ளது.

Source: Twitter

இதன்படி பார்க்கையில் நியூஸ் 7 தமிழ், ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்தச் செய்தியானது முற்றிலும் தவறானது என்பது நமக்கு தெளிவாகிறது.

Conclusion

தமிழகத்தில் முதல் கொரானா தடுப்பூசி தூய்மை பணியாளரான முத்துமாரி என்பவருக்கு செலுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் வெளிவந்தச் செய்தி தவறானது என்பதையும், உண்மையில் அவருக்கு மூன்றாவதாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/posts/4260500507345458

One India Tamil: https://twitter.com/thatsTamil/status/1350320691220865025

Dinakaran: https://twitter.com/dinakaranonline/status/1350321951361830913

News J: https://twitter.com/NewsJTamil/status/1350323154124636160


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,843

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage