தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் இல்லம் தேடி வெள்ளம் என்று குறிப்பிட்டு ஆளும் திமுகவை விமர்சித்து புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: எத்தியோப்பியா எரிமலை வெடிப்பின் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
இல்லம் தேடி வெள்ளம் என்று குறிப்பிட்டு திமுகவை விமர்சித்து சில படங்கள் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து அப்படங்கள் குறித்து ஆராய்ந்தோம்.
முதல் படம்: வணிக வளாகத்தின் முன் சூழ்ந்திருக்கும் வெள்ளம்.

இப்படம் குறித்து அறிய இப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம். அத்தேடலில் தி எக்கானமிக் டைம்ஸ் ஊடகத்தில் டிசம்பர் 5, 2015 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தியில் வைரலாகும் இதே படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் 2015 டிசம்பரில் வேறு சில ஊடகங்களும் இதே படத்தை பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் அண்மையில் எடுக்கப்பட்டதல்ல; ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முந்திய பழைய படம் என உறுதியாகின்றது.
இரண்டாம் படம்: மழை வெள்ளத்தில் சிக்கியவருக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர்.

இப்படம் குறித்து அறிய இப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம். அத்தேடலில் ராய்ட்டர்ஸ் ஊடகத்தில் டிசம்பர் 8, 2023 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தியில் வைரலாகும் இதே படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் 2023 டிசம்பரில் வேறு சில ஊடகங்களும் இதே படத்தை பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் அண்மையில் எடுக்கப்பட்டதல்ல; ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய பழைய படம் என உறுதியாகின்றது.
Also Read: தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக்குப்பின் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளாரா?
Conclusion
இல்லம் தேடி வெள்ளம் என்று குறிப்பிட்டு திமுகவை விமர்சித்து பரவும் படங்கள் பழைய படங்களாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by The Economic Times, dated December 5, 2015
Report by Reuters, dated December 8, 2023