Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சென்ற பாதிரியாரைத் தாக்கும் மக்கள் என்று பரவும் தெலுங்கானா வீடியோ!
கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சென்ற பாதிரியாரைத் தாக்கும் மக்கள் என்று பரவும் வீடியோ தெலுங்கானவைச் சேர்ந்ததாகும்

அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்றாரா நிர்மலா சீதாராமன்?
அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இளம்பெண் ஒருவர் பாஜக கொடி, துண்டுடன் இருப்பதாகப் பரவும் போலி புகைப்படம்!
இளம்பெண் ஒருவர் பாஜக கொடியைத் தாங்கியிருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

வேங்கைவயலுக்குள் அனுமதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் என்று பரவும் நாதக வேட்பாளர் புகைப்படம்!
வேங்கைவயலுக்குள் அனுமதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் என்று பரவும் புகைப்படத்தில் இருப்பவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆவார்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)