இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்றாரா மோடி?
பிரதமர் மோடி 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று எண்ணி பாஜகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்றாரா யோகி ஆதித்யநாத்?
கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில் யோகி ஆதித்யநாத் பேசியதாகக் கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

யோகி ஆதித்யநாத் வருகையை முன்னிட்டு ‘தக்ஷிண பிரதேசம்’ என்று போஸ்டர் அடித்ததா பாஜக?
யோகி ஆதித்யநாத் தமிழகத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு, ‘தக்ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும் யோகி ஆதித்யநாத்’ என்று பாஜக போஸ்டர் உருவாக்கியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்று போஸ்டர் ஒட்டினாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?
தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போஸ்டர் ஒட்டியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

திமுக ஆட்சி அமைத்ததும் சபரிமலைக்கு செல்வேன் என்றாரா கனிமொழி எம்.பி?
திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிரணியினரோடு சபரிமலைக்குச் செல்வேன் என்று கனிமொழி எம்.பி பரப்புரையில் பேசியதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)