Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை; கே.டி.ராகவனைத்தான் சந்தித்தேன் என்றாரா சீமான்?
நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை; கே.டி.ராகவனைத்தான் சந்தித்தேன் என்று சீமான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் அனுமதி மறுப்பு என்னும் நியூஸ்கார்ட் உண்மையா?
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் அனுமதி மறுப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியானதாகும்.

கே.என்.நேரு நிர்மலா சீதாராமனுடன் அவசர சந்திப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
கே.என்.நேரு நிர்மலா சீதாராமனுடன் அவசர சந்திப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழக எல்லையில் கேரளாவின் குப்பைகள் கொட்டப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
தமிழக எல்லையில் கேரளாவின் குப்பைகள் கொட்டப்படுவதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனம் கொடுத்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனம் கொடுத்ததாக கூறி பரப்பப்படும் வீடியோ தவறானதாகும்.