Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

அண்ணாமலையின் யாத்திரையால் வணிகர் சங்கம் கடையடைப்பு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைப்பு செய்துள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று பரவும் நையாண்டி நியூஸ்கார்ட்!
நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் ஒரு நையாண்டிப் பதிவாகும்.

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்றாரா சீமான்?
அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஆழ்ந்த இரங்கல் பதிவிற்கு தடை கேட்டு மனு அளித்ததா பாஜக?
ஆழ்ந்த இரங்கல் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த செய்திகளின் கீழ் கமெண்ட் பதிவிட தடை கோரி பாஜக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை போலீசார் தாக்கினரா?
குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)