இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் பெட்ரோலில் சேர்க்கப்படுகிறதா?
இந்திய விஞ்ஞானிகள், பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி
கண்டறிந்த ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் பெட்ரோலில் கலந்து விற்கப்படுவதாக
பரவும் செய்தி தவறானதாகும்.

ஒபாமா ‘மோடியுடன் கைகுலுக்கியதற்கு வெட்கப்படுகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டாரா?
ஒபாமா, டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக
ட்விட்டரில் ‘மோடியுடன் கைகுலுக்கியதற்கு வெட்கப்படுகிறேன்’ என்று
கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

முகேஷ் அம்பானியின் பேரனைச் சந்தித்தாரா மோடி?
முகேஷ் அம்பானிக்கு புதிதாகப் பிறந்துள்ள பேரப்பிள்ளையைக் காண மோடி அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது பழையப் புகைப்படமாகும்.

சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜின் குழந்தையா இது?
மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மேக்னா ராஜ் தம்பதிகளின் குழந்தையின் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி குறித்து பேசினாரா?
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கூட்டணிக் குறித்துப் பேச உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது தவறானச் செய்தியாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)