இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு அணில்கள் மட்டுமே காரணம் என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? உண்மை என்ன?
தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு அணில்கள் மட்டுமே காரணம் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாகப் பரவும் வீடியோ முழுமையானத் தகவலை எடுத்துரைக்கவில்லை.

வாகன ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி என TNDWWA அறிவிப்பு வெளியிட்டதா?
வாகன ஓட்டுனர்களுக்கு, நிவாரண நிதியாக தமிழக அரசின் சார்பில் ரூ.1000 வழங்கப்பட இருப்பதாக தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அதிமுக கட்சியை யானையின் சாணி என்று விமர்சனம் செய்தாரா?
பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணி என்பதாக விமர்சனம் செய்ததாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

சீமான், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலி சமூக வலைத்தள கணக்குகள் குறித்த செய்திக்கு பயன்படுத்தப்பட்டதா?
சீமான், ஈழத்தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை சன் நியூஸ் செய்தி நிறுவனம், சமூக வலைத்தளங்களில் போலியாக பகிரப்படும் படங்கள் குறித்த ஒன்றிய அரசு அறிவிப்பு செய்திக்கு பயன்படுத்தியதாகப் பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசனாரா டாக்டர் கிருஷ்ணசாமி?
டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக பரவும் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)