இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினாரா உதயநிதி ஸ்டாலின்?
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

தமிழகத்தில் பிராமணர்களின் எழுச்சி ஊர்வலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தமிழகத்தில் பிராமணர்களின் எழுச்சி ஊர்வலம் என்று பரவும் புகைப்படம் பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ நிகழ்வில் எடுக்கப்பட்டதாகும்.

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?
ராகுல் காந்தியை தேசத்துரோகி என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும். டிரம்ப் பதிவிட்டதாக வைரலாகும் எக்ஸ் பதிவை அவர் பதிவிடவில்லை. டிரம்ப் பெயரில் போலி/பகடி எக்ஸ் கணக்கு நடத்தும் அஷ்வினி ஸ்ரீவஸ்தவா என்பவர் பதிவிட்டதாகும்.

டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் எடிட் படம்!
டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் படம் Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட படமாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)