இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க கட்டாயப்படுத்தியதா பாஜக?
காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க பாஜக கட்டாயப்படுத்தியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

ஆவணி அவிட்டத்தில் பன்றிகளுக்கு பூணூல் போராட்டம் எனப்பரவும் 2017ம் ஆண்டு புகைப்படம்!
ஆவணி அவிட்டத்திற்காக பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்திற்கு முயன்ற திராவிட கழகத்தினர் கைது என்று பரவும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

தமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் ‘மூன் வாக்’ சென்றாரா?
தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றதாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல.

சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்றாரா?
சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்று கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் எடிட் புகைப்படம்!
அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)