Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
“பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று பரவும் உடைந்த அரசு பேருந்து படம்!
“பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று பரவும் புகைப்படமானது பழைய படமாகும். அப்படத்தில் காணப்படும் பேருந்தின் சேவையானது 2019 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்டது.
மழையில் நெல்மூட்டைகள் நனையும் நிலையில் கார் ரேஸ் தேவையா என்று பரவும் புகைப்படம் தற்போதையதா?
மழையில் நெல்மூட்டைகள் நனையும் நிலையில் கார் பந்தயம் தேவையா என்று பரவும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?
ஸ்ரீபெரும்புத்தூர் சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்ததாக பரவும் வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதல்ல, அது கர்நாடக மாநிலம் உடுப்பியில் எடுக்கப்பட்டதாகும்.
சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?
சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ் என்பதாகப் பரவும் வீடியோ தகவல் போலியானதாகும்.
எலான் மஸ்க்கை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் டிவி குரேஷி உள்ளிட்டோர் பகிர்ந்த புகைப்படம் உண்மையா?
எலான் மஸ்க்கை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் டிவி குரேஷி உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வருகின்ற புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.