Fact Check
வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு; திமுக ஆட்சி காரணமா?

திமுக ஆட்சி காரணமாக வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு அடைந்தாக தகவல் ஒன்று பரவி வருகின்றது.

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-ஆவது இடத்திலிருந்து 11-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்றும், இதற்கு ஆளும் திமுகதான் காரணம் என்று கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலை நம் வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு அனுப்பி இதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார். ஆகவே இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Fact check/ Verification
திமுக ஆட்சி காரணமாக வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு அடைந்தாக தகவல் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
நியூஸ் 7 தமிழில் வெளிவந்த நியூஸ்கார்டை அடிப்படையாக வைத்தே செய்தியானது வைரலாகி வருகின்றது. ஆகவே அந்த நியூஸ்கார்ட் எப்போது வெளிவந்தது எப்போது என்பது குறித்து தேடினோம். இதில் இந்த நியூஸ்கார்டானது கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது என்பதை அறிய முடிந்தது. அத்தருணத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்களே முழுமையடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுக விட்டு சென்ற நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இதில் அதிமுக ஆட்சி காரணமாக வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-ஆவது இடத்திலிருந்து 11-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதை நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்ததுடன், இதுகுறித்த செய்தியையும் வெளியிட்டிருந்தது.

இதன்பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், “சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான ஒப்பீட்டு ஆய்வின்படி, 2004-05 முதல் 2011-12 வரையுள்ள காலத்திற்கான சராசரி வளர்ச்சியில், தமிழ்நாடு பெரிய மாநிலங்களில் 3-ஆவது இடத்தைப் பிடித்தது. ஆனால் 2012-2012-13 முதல் 2018-19 வரையுள்ள காலத்தில், தமிழ்நாடு 11-ஆவது இடத்தை அடைந்தவுடன், அதன் சராசரி வளர்ச்சியும், முந்தைய 7 ஆண்டுகளின் வளர்ச்சியான 10.3 சதவீதத்தைக் காட்டிலும் 3.2 சதவீதப் புள்ளிகள் குறைவாக, 7.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.“ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

மேற்கிடைத்த ஆதாரங்களின் படி பார்க்கையில் வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-ஆவது இடத்திலிருந்து 11-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது திமுக ஆட்சி காலத்தில் அல்ல, அதிமுக ஆட்சி காலத்தில் என்பது தெளிவாகின்றது.
Conclusion
திமுக ஆட்சி காரணமாக வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு அடைந்தாக பரவும் தகவல் தவறானதாகும். இதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)