வந்தச் செய்தி
ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மதுரையில் மேலும் 19 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தரவு.

சரிப்பார்ப்பு:
மதுரையில் ஏற்கனவே ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து ஜூலை 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு இருந்த நிலையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்ததாக புதியத் தலைமுறை நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதன் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
உண்மைத் தன்மை:
மேலே கூறிய செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய கூகுளில் ஆராய்ந்தோம்.
அதில் நமக்கு பல புதிய விவரங்கள் கிடைத்தது. ஜூலை 15 ஆம் தேதி இந்து தமிழ் திசை இணையத்தளத்தில், “மதுரையில் முடிவுக்கு வந்த முழு ஊரடங்கு: கரோனா பரவலால் தொடரும் கட்டுப்பாடுகள்” எனும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதில், மதுரையில் தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு நேற்று, அதாவது ஜூலை 14 ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது என்ற செய்திக் குறிப்பு இருந்தது.
இதேபோல், இதே தினத்தில் தினமலர் இணையத் தளமும் இதே செய்தியை வெளியிட்டு இருந்தது.
ஜூலை 14 ஆம் தேதியன்றே ஊரடங்கு முடிந்த நிலையில் எவ்வாறு புதிய தலைமுறைத் தொலைக்காட்சி ஜூலை 31 வரை முழு ஊரடங்கு இருக்கும் என்று செய்தி வெளியிட்டிருக்க முடியும் என்ற சந்தேகம் நமக்குள் வந்தது.
இதன்பின் பரப்பப்பட்ட புதியத் தலைமுறை நியூஸ் கார்டில் இருந்த எழுத்துறுக்களை(Fonts) கூர்மையாக உற்று நோக்கியபோது எழுத்துகளுக்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்துறுவும் எண்களுக்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்துறுவும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதாக எங்களுக்குத் தோன்றியது.
அந்த நியூஸ் கார்டில் உண்மையான எண்களை மாற்றி புதிய எண்களைச் சேர்த்திருக்கலாமோ என்ற சந்தேகம் எங்களுக்குத் தோன்றியது.
இந்தக் கோணத்தில் இவ்விஷயத்தை அணுகியபோது எங்களின் சந்தேகம் ஊர்ஜிதமானது. அதாவது, “ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை மதுரையில் 7 நாட்களுக்கு முழு முடக்கம் ” என்று புதிய தலைமுறை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. இச்செய்தியையே இவ்வாறு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்கிற உண்மை நமக்குத் தெரிய வந்தது.
கீழே இருப் படங்களையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். இதன்மூலம் எங்கள் கூற்று உண்மை என்பதை நீங்கள் அறியலாம்.
முடிவு:
நம் விரிவான ஆய்வுக்குப் பின் ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை மதுரையில் முழு ஊரடங்கு என்று பரப்பப்ப்பட்டச் செய்தி பொய்யானது என்று தெளிவாகியுள்ளது.
Sources:
- Google search
- YouTube
Result: False
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம் அல்லது எங்கள் இணையத்தளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)