Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடிகர் விஷால் பாஜகவில் இணையவிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிரம் மாநிலம் குறித்துத் தவறாகப் பேசியதால் அவருக்கும் மகாராஷ்ட்ராவில் ஆளும் கட்சியாக இருக்கும் சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசும் கங்கனாவின் பாதுகாப்புக்காக அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பைக் கொடுத்துள்ளது.
இந்த பரப்பான சூழலில் நடிகர் விஷால் கங்கனாவைப் பாராட்டி பதிவு ஒன்றை தன் டிவிட்டரில் பதிவிட்டார்.
அதில்,
“அன்பார்ந்த கங்கணா,
உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை.
இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்குகிறது.
1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம். பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.
உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்”.
என்று விஷால் தெரிவித்துள்ளார்.
இவ்விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்த நிலையில், விஷால் பாஜகவில் இணையவிருப்பதாகவும், இதுக்குறித்து கலந்தாலோசிப்பதற்கு பாஜகவின் தமிழகத் தலைவர் எல்.முருகன் அவர்களிடம் நேரம் கேட்டதாகவும் செய்தி ஒன்று ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் பரவி வருகிறது.
வைரலாகும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாகும் இச்செய்திக் குறித்து ஆராய்ந்தபோது, பரப்பப்படும் இச்செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது.
விஷாலின் மேலாளர் ஹரி அவர்கள் ஊடகங்களில் பரப்படும் இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
“பாஜக கட்சியில் இணைய விஷால் சார் நேரம் கேட்கவுமில்லை. அதே போல், அவர் பாஜக கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலிலும் உண்மையில்லை”
என்று ஹரி தெரிவித்துள்ளார்.
தந்தி டிவியிலும் இதுக்குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
நம் விரிவான ஆய்வுக்குப்பின், விஷால் பாஜகவில் இணைவதற்காக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களை சந்திக்க நேரம் கேட்டதாக ஊடகங்களில் வந்தச் செய்தியானது முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகியுள்ளது.
Dinamalar Twitter Profile: https://twitter.com/dinamalarweb/status/1304998894829477890
News 7 Twitter Profile: https://twitter.com/news7tamil/status/1305056460276072448
Vishal Twitter Profile: https://twitter.com/VishalKOfficial/status/1303989224840941571
Thanthi Tv YouTube Channel: https://www.youtube.com/watch?v=a-wGipXJKBg
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 4, 2023
Ramkumar Kaliamurthy
June 30, 2021
Ramkumar Kaliamurthy
January 5, 2021