வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact Checkசாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?

சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஸ்ரீபெரும்புத்தூர் சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு வெளியிடப்பட்ட கிண்டல் வீடியோ

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகும். இவ்வீடியோவில் காணப்படும் சாலைக்கும் தமிழகத்திற்கும் தொடர்பில்லை.

ஸ்ரீபெரும்புத்தூரின் சாலைகள் நீளம் தாண்டுதலுக்கு தயார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

ஸ்ரீபெரும்புத்தூர் சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு வெளியிடப்பட்ட கிண்டல் வீடியோ

X Link | Archive Link

ஸ்ரீபெரும்புத்தூர் சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு வெளியிடப்பட்ட கிண்டல் வீடியோ

Facebook Link

ஸ்ரீபெரும்புத்தூர் சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு வெளியிடப்பட்ட கிண்டல் வீடியோ

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: “பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று பரவும் உடைந்த அரசு பேருந்து படம்!

Fact Check/Verification

ஸ்ரீபெரும்புத்தூர் சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அத்தகவல் குறித்து ஆராய்ந்தோம்.

இத்தேடலில் இச்சம்பவமானது கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடந்ததாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அந்த ஊடகங்களிலும் இச்சம்பவம் உடுப்பியில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

முன்னதாக இவ்வீடியோவானது  பெங்களூரில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக ஊடகங்களில் பரவியது.  அதனை தொடர்ந்து நியூஸ்செக்கர் கன்னடத்தில் இவ்வீடியோ பெங்களூரில் எடுக்கப்பட்டதல்ல, உடுப்பியில் எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியை இங்கே காணலாம்.

 Also Read: மழையில் நெல்மூட்டைகள் நனையும் நிலையில் கார் ரேஸ் தேவையா என்று பரவும் புகைப்படம் தற்போதையதா?

Conclusion

ஸ்ரீபெரும்புத்தூர் சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்ததாக பரவும் வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதல்ல, அது கர்நாடக மாநிலம் உடுப்பியில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
X post from the Sun News, Dated August 28, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular