Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமிழ்நாடு சாலை என்று பரவும் 2018ஆம் ஆண்டு கேரள புகைப்படம்.
Fact: வைரலாகும் TOI செய்திப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மழையில் சாலைகளின் நிலைமை என்று புகைப்படம் ஒன்று பரவிய நிலையில் அப்புகைப்படம் பொய்யானது என்று நிரூபிக்க அப்புகைப்படம் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக செய்தி ஒன்றை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சென்னை மழையில் சாலையின் நிலைமை என்று பாஜகவினர் பரப்பும் புகைப்படம் பொய்யானது என்று திமுகவினர் பரப்பும் செய்திப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில், பாஜகவினர் பலரும் சென்னை சாலையின் நிலைமை என்று பரப்பும் புகைப்படத்தின் பின்னணியை ஆராய்ந்தோம். அதன் முடிவில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பத்திரிக்கையாளரான ஓம்ஷஸ்வின் என்பவர், ”#Chennai roads in a nutshell. Madipakkam. Residents let their cars into metro water sewage line pits as water had covered the road yesterday night. No barricades, no warning, no reflectors. Pathetic quality of civic work. #ChennaiRains” என்று குறிப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதுமட்டுமின்றி, சென்னை சாலைகளின் பல்வேறு புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்த நிலையில் சில இடங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ட்வீட் செய்துள்ளது.
இந்நிலையில், மடிப்பாக்கம் சாலையின் நிலைமை என்று அவர் பகிர்ந்திருந்த புகைப்படத்தையே பாஜகவினர் பலரும் பகிர்ந்து வருகின்ற நிலையில் அப்புகைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்டது என்றும், “Vyttila: Collector’s order falls on deaf ears” என்கிற தலையில் 2018ஆம் ஆண்டு வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் இடம்பெற்றிருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Times of India வெளியிட்ட செய்தியை ஆராய்ந்தபோது தற்போது வைரலாகும் புகைப்படம் அச்செய்தியில் இடம்பெற்றிருக்கவில்லை. வேறு புகைப்படங்களே இடம்பெற்றிருந்தது. மேலும், ஓம்ஷஸ்வினும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று, தற்போதைய மடிப்பாக்கம் சாலையின் நிலைமை தவறாக சித்தரிக்கப்பட்டு பரவுவதாக விளக்கமளித்துள்ளார்.
இதன்மூலம், சென்னை மழையில் சாலை ஒன்றில் நிலைமை என்று பரவும் புகைப்படத்தை விமர்சிக்க, அது பொய்யான தகவல் என்று நிரூபிக்க பரப்பப்படும் செய்திப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
சென்னை மழையில் சாலையின் நிலைமை என்று பாஜகவினர் பரப்பும் புகைப்படம் பொய்யானது என்று திமுகவினர் பரப்பும் செய்திப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News Report From, Times Of India, Dated June 29, 2018
Twitter Post From, Omjasvin M D, TOI Senior Correspondent, Dated June 19, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 16, 2025
Ramkumar Kaliamurthy
July 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
July 7, 2025