உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிப்படையில் ஒரு சாமியார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்பேர்பட்டவர் கடவுள் என்பதே இல்லை, கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்நாள் முழுவதும் பேசிய பெரியார் ஈ.வெ.ராமசாமி சிலைக்கு முன் நின்று புகைப்படம் எடுத்தாக சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல் ஒன்றை பரப்பி வருகின்றனர்.



Also Read: மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்றாரா உதயநிதி ஸ்டாலின்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
யோகி ஆதித்யநாத் பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இத்தகவலுக்கு ஆதாரமாக விளங்கிய புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் படத்தில் இருக்கும் சிலையில் இருப்பவர் பெரியார் அல்ல என்பதும், யோகி ஆதித்யநாத்தின் ஆன்மீக குருவாக கருதப்படும் மஹந்த் அவைத்யநாத் என்பதும் தெரிய வந்தது.
யோகி ஆதித்யநாத் கடந்த வெள்ளியன்று (07/01/2022) உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் மஹந்த் வைத்யநாத்தின் சிலையை திறந்து வைத்து, கூடவே பல நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது. அதை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
மேற்கண்ட நிகழ்வின்போது மஹந்த் அவைத்யநாத் சிலையுடன் யோகி ஆதித்யநாத் எடுத்துக்கொண்ட புகைப்படமே, பெரியார் சிலை முன் எடுத்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் திரித்து பரப்பப்பட்டு வருகின்றது.
Also Read: தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கா?
Conclusion
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவர் மஹந்த் அவைத்யநாத் சிலைக்கு முன் நின்றே புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)