ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபோலீசாரை அறைந்த இளைஞன்; வைரலாகும் சம்பவம் திமுக ஆட்சியில் நடந்ததா?

போலீசாரை அறைந்த இளைஞன்; வைரலாகும் சம்பவம் திமுக ஆட்சியில் நடந்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக வைரலாகும் வீடியோ.

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் 2017 ஆம் ஆண்டில் நடந்ததாகும். 2017ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது அதிமுகவாகும். திமுக அல்ல.

“திமுக அரசால் தமிழகம் அழிந்து வருகிறது. போலீஸ்னா ஒரு பயம் இருக்கணும். இப்படி கண்ட நாயெல்லாம் சீருடை அணிந்த காவலர் மீது கைவைக்க துணிந்த காரணத்தால்தான் இன்று தமிழ்நாடு கொலைகளமாக மாறியுள்ளது. காவல்துறை மீண்டும் நிமிர வேண்டும்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக பரவும் வீடியோ

X Link | Archive Link

திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக பரவும் வீடியோ

Archive Link

திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக பரவும் வீடியோ

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இத்தேடலில் 2017 டிசம்பரில் ஒன் இந்தியா வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் இச்சம்பவம் சென்னையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்ததை தொடர்ந்து, வீடியோவில் காணப்படும் போலீசார் அவர்கலை நிறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் அந்த இளைஞன் போலீசாரை அடித்ததாக இச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக பரவும் வீடியோ
Screengrab from One India Report

இதனையடுத்து தேடுகையில் தினமலர், சத்யம் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து 2017 டிசம்பரில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் நடந்ததல்ல, அது 2017 ஆம் ஆண்டில் நடந்தது என்று உறுதியாகின்றது .

Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

Conclusion

திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக பரவும் வீடியோ 2017 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். ஆனால் 2017ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது திமுக அல்ல; அதிமுகவாகும். ஆகவே இச்சம்பவத்திற்கும் திமுகவிற்கும் எவ்வித தொடர்புமில்லை என அறிய முடிகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from One India, December 30, 2017
Report from Dinamalar, December 25, 2017
Report from Sathyam News, December 27, 2017

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular