Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
யுவன்ஷங்கர் ராஜா, இளம் இசையமைப்பாளரான இவர், தனது தந்தையான இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மதம் சார்ந்த கருத்துக்களைப் பகிர்ந்திருந்து கடிதம் ஒன்றினை எழுதியது போன்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இசைஞானி இளையராஜா அவர்கள், தமிழ் சினிமா உலகில் இசைக்கான ஐகான் ஆக கோலோச்சி வருகின்றவர். இவரது இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜாவும் இளைஞர்களின் மனதைக் கவரும் வகையில் பாடல்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக ஜொலிக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2016 ஆம் வருடம் யுவன் ஷங்கர் ராஜா ஷாப்ரூனிஷா என்கிற ஆடை வடிவமைப்பாளரை மணந்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இதுகுறித்த சர்ச்சைகளும், யுவனின் மதமாற்றம் குறித்த கேள்விகளுக்கும் இருவருமே பதிலளித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் அவர் தனது தந்தையான இளையராஜாவிற்கு எழுதிய கடிதம் என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அதில் ஒரு மதத்தை உயர்வாக பேசி, மற்றொன்றை அவர் விமர்சித்திருப்பது போன்ற கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலாகும் தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
யுவன்ஷங்கர் ராஜா தனது தந்தைக்கு எழுதிய மடல் என்று பரவுகின்ற இந்த தகவல் குறித்த உண்மையை அறிய இதுகுறித்த ஆய்வில் இறங்கினோம்.
யுவன்ஷங்கர் ராஜா அவர்களின் மக்கள் தொடர்பு அலுவலக பி.ஆர்களிடம் இதுகுறித்து பேசினோம். அப்போது பி.ஆர்.ஓ ரேகா அவர்கள், “குறிப்பிட்ட அந்த கடிதம் போலியானது. தவறாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. அதற்கும் யுவன்ஷங்கர் ராஜா அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று நம்மிடம் உறுதிப்படுத்தினார்.
மேலும், யுவன்ஷங்கர் ராஜா அவர்களும், ரமலான் நோன்பு மாதத்தை முன்னிட்டு தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் குரான் வாசகங்களை தினசரி பதிவிட்டு வருவதும் நமக்குக் கிடைத்தது.
எனவே, யுவன்ஷங்கர் ராஜாவின் கடிதம் என்று வலம்வருகின்ற வரிகள், சமூக வலைத்தளத்தில் போலியாக உருவாக்கப்பட்டு பரப்பப்படுவது நமக்குத் தெரிய வந்தது.
யுவன்ஷங்கர் ராஜா தனது தந்தையான இளையராஜாவிற்கு எழுதிய மடல் என்று சமூகவலைத்தளங்களில் பரவும் தகவல் போலியாக சித்தரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Yuvan Shankar Raja’s PRO/office
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 2, 2023
Vijayalakshmi Balasubramaniyan
November 12, 2021