நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“தனது மூன்றாவது கணவனை ஐந்தாவது கணவனாக மீண்டும் திருமணம் செய்த நடிகை..வாழ்த்தலாமே” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது திருமணம் செய்து கொண்டதாக பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படம் குறித்து ஆராய்ந்தபோது வனிதா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்து வருகின்ற Mr&Mrs என்கிற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சுபமுகூர்த்தம் என்கிற பாடல் என்பதாக புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக, இத்திரைப்படத்தின் பிரமோஷன் காட்சியும் கூட அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக பரவியிருந்தது.
இதுகுறித்து, நடிகை வனிதா தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது குறிப்பிட்ட புகைப்படம் Mr&Mrs பாடல் காட்சி என்று விளக்கமளித்தனர்.
Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது திருமணம் செய்து கொண்டதாக பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும். அது திரைப்படக்காட்சி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By Star Music India, Dated Februry 14, 2025
Instagram Post From, Vanitha Vijayakumar, Dated February 16, 2025