திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Check2ஜி வழக்கில் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறதா?

2ஜி வழக்கில் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்பட இருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவுகிறது.

2ஜி
Source: Twitter

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக கடந்த 2011 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்; ஏப்ரல் 4 ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதனை உண்மையறியும் சோதனைக்காக நமக்கு அனுப்பி வைத்திருந்தார் நமது வாசகர் ஒருவர்.

2ஜி
Source: Whatsapp bot

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/Verification:

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு என்பதாகப் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

ஆனால், அந்த தேடலில் குறிப்பிட்ட அப்புகைப்படத்துடன் செய்தித்தளம் ஒன்றின் செய்திகள் அணிவகுத்தன. எனினும், அவர்களது இணையப்பக்கத்தினுள்ளும் அந்த புகைப்படத்தைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், மற்றொரு செய்தித்தளத்தில் மறு விசாரணை செய்தியில் அப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

2ஜி
Source: Google

தொடர்ந்து அப்புகைப்படத்தை எடுத்து மீண்டும் ரிவர்ஸ் சர்ச் செய்தபோது, ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் வழக்கு குறித்த தனிப்புகைப்படங்கள் இடம்பெற்ற பழைய செய்திகளே கிடைத்தன.

2ஜி
Source: Google

இதனைத் தொடர்ந்து மேலும் முக்கிய வார்த்தைகளில் தேடியபோது கடந்த 2017 ஆம் ஆண்டே இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டதும், தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிபிஐ மற்றும் இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இணைந்து மேல்முறையீடு செய்திருந்ததும் நமக்குத் தெரிய வந்தது.

2ஜி
Source: Google

கோவிட் பரவல் காரணமாக தள்ளிப்போன இந்த மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 5, 2020 முதல் தினமும் நடத்த டெல்லி நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இதைத்தவிர இவ்வழக்கில் வேறெந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை.

source: YouTube

எனவே, 2ஜி வழக்குடன் ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ந்தபோது கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதியன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், ஏப்ரல் 4 ஆம் தேதி, 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்துரைகளைப் பதிவு செய்யக் கூறியிருந்த செய்தி இடம்பெற்றிருந்தது.

2ஜி
Source: Google

மேலும், இவ்வழக்கு குறித்து டெல்லி நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலரிடம் கேட்டபோது, மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு குறித்த வேறெந்த அறிவிப்பும் தற்போது வரையில் வெளியிடப்படவில்லை என்பதும் நமக்குத் தெரிய வந்தது.

Source: YouTube

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்ட செய்தித்தளத்தின் லிங்கையும் இங்கே உங்களுக்காக இணைத்துள்ளோம்.

Source: YouTube

Conclusion:

2ஜி அலைக்கற்றை வழக்கில் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு வரவிருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Tamil Samayam: https://tamil.samayam.com/latest-news/state-news/the-trial-in-the-2g-case-is-being-held-in-the-delhi-high-court-from-today-october-5/articleshow/78487116.cms

TOI: https://timesofindia.indiatimes.com/india/2g-spectrum-verdict-no-proof-of-scam-says-court-a-scam-of-lies-says-congress/articleshow/62201212.cms

The Hindu: https://www.thehindu.com/news/resources/full-text-of-2g-case-verdict/article22122341.ece

Puthiyathalaimurai: http://www.puthiyathalaimurai.com/newsview/96900/Dhanush-won-national-award-for-best-actor-asuran-movie.html

BBC: https://www.bbc.com/tamil/india-54341476

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular