குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை, தங்களுக்கு சொந்தமான இடத்தில் RSS அமைப்பு கட்டிக்கொடுத்ததாக கூறி அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் படத்தை ஒருவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நம் நாட்டில் கொரானா பரவலின் இரண்டாம் அலை காரணமாக பலத் துன்பங்களை நாம் அனுபவித்து வருகின்றோம். ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரானா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகளுக்கு தட்டுப்பாடு, மருந்து தடுப்பாடு என பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகின்றோம்.
இப்பிரச்சனைகளின் காரணமாக நாளுக்கு நாள் நம் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றோம். இதனால் பல தனியார் அமைப்புகளும் மக்களும் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கித் தருதல், தற்காலிக மருத்துமனை அமைத்தல் போன்ற தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க சில அரசியல் சார்ந்த அமைப்புகள் உதவி செய்வதாக கூறி பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதில் முக்கியமாக பாஜகவின் தாய் கழகம் என்று அழைக்கப்படும் RSS அமைப்பு குறித்து பல பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் கூட RSS அமைப்பு, 6000 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டாவது பெரிய கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்றினை 45 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கியுள்ளது என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து, அது பொய்யான தகவல் என்று நிரூபித்து, செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை படிக்க: ஆர்.எஸ்.எஸ் 6000 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை அமைத்துள்ளதா?
இதன் வரிசையில் தற்போது, 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை, குஜராத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் RSS அமைப்பு கட்டிக்கொடுத்ததாக கூறி அமெரிக்காவின் பென்டகன் படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இப்பதிவை பலரும் பகிர்ந்து, இப்பதிவு குறித்த விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/w8wlt

Archive Link: https://archive.ph/GPTBM

Archive Link: https://archive.ph/QuOjh
Fact Check/Verification
குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை RSS அமைப்பு கட்டிக்கொடுத்ததாக கூறி அமெரிக்காவின் பென்டகன் படத்தை ஒருவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார்.
இதன்பின் இப்பதிவை பதிவிட்ட நபர் ஒரு சங்கி என்றும், இவர் வேண்டுமென்றே பொய் செய்தி பரப்புகின்றார் என்றும் கூறி பலர் இவரை விமர்சித்திருந்தனர்.
அமெரிக்காவின் பென்டகன் படத்தை RSS அமைப்பு கட்டிக்கொடுத்த மருத்துவமனையின் புகைப்படம் என்று பதிவிட்ட நபர் எதற்காக இவ்வாறு பதிவிட்டார், இதன் பின்னணியில் இருந்த காரணம் என்பதை அறிய இப்பதிவு குறித்து ஆய்வு செய்தோம். அதில் அந்த நபர் வேண்டுமென்றே கேலி செய்வதற்காக இவ்வாறு செய்துள்ளார் என்பதை நம்மால் அறிய முடிந்தது.
RSS கட்டிக்கொடுத்த 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை என்று சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த பதிவின் கமெண்ட் செக்ஷனை ஆராய்ந்தபோது இந்த உண்மை நமக்கு தெளிவாகியது.
கமெண்ட் செக்ஷனில், பலர் இப்பதிவு குறித்து கிண்டலாக கமெண்ட் அடிக்க, அதற்கு இப்பதிவை இட்டவரும் கிண்டலாக பதில் அளித்திருந்ததை நம்மால் காண முடிந்தது.




RSS கட்டிக்கொடுத்த 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்தப் பதிவு, @R_Jeevanand எனும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த கணக்கில் RSS மற்றும் பாஜகவை கிண்டல் செய்து மேலும் பல பதிவுகள் பதிவிடப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிந்தது.


நம் ஆய்வின் மூலம் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவை அந்நபர் கேலியாக பதிவிட்டுள்ளார். அதை உணராமல், சமூக வலைத்தளங்களில் அவர் RSS-ஐ சார்ந்தவர் என்றும், அவர் வேண்டுமென்றே பொய் செய்தி பரப்புகின்றார் என்றும் தவறாக பரப்பி வருகின்றனர்.
Conclusion
குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை, தங்களுக்கு சொந்தமான இடத்தில் RSS அமைப்பு கட்டிக்கொடுத்ததாக கூறி அமெரிக்காவின் பென்டகன் படத்தை பகிர்ந்த நபர் அதை கேலியாக பகிர்ந்துள்ளார் என்பதையும், அதை உணராமல் மற்றவர்கள் அவரை தாக்கி வருகின்றனர் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Satire
Our Sources
Twitter Posts and Comments
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)