தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கிய அதிமுக அரசு என்கிற கருத்துக்கணிப்பு முடிவு ஒன்றினை தற்போது புதியதலைமுறை செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகளைப் பெற கட்சிகள் பொதுவெளியில் ஒருபக்கம் பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்றன என்றால் மறுபுறம் சமூக வலைத்தளங்கள் மூலமாக வதந்திகளையும், ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளையும் ஒருவர் மீது ஒருவர் ‘ஸ்லீப்பர் செல்’ எனப்படும் சமூக ஊடக பயனாளர்கள் மூலமாக செய்து வருகின்றன.
இதில், அந்தக்கட்சி இந்தக்கட்சி என்ற வேறுபாடுகள் இன்றி வதந்திகளைப் பரப்புவதில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில், தற்போது தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கிய அரசு அதிமுக தலைமையிலான அரசு என்று மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி புதியதலைமுறை செய்தி ஊடகம் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளதாகவும், எனவே சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.


இந்தப் பதிவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
நல்லாட்சியை தமிழகத்தில் வழங்கிய அதிமுக அரசு என்றும், அக்கருத்துக்கணிப்பில் எல்லா வகையிலும் அதிமுக தேர்தலில் முன்னிலை பெறக்கூடிய சாதகங்கள் இருப்பதாகவும் பகிரப்படும் இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதன் முடிவில், கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தலைமுறை செய்தி ஊடகம் கருத்துக்கணிப்பு ஒன்றினை வெளியிட்டுருந்தது நமக்குக் கிடைத்தது.
அதன் அடிப்படையில், 2016 ஆம் ஆண்டு புதிய தலைமுறை வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை எடுத்து தற்போதைய புதிய கருத்துக்கணிப்பு போன்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுவது உறுதியானது.
Conclusion:
நல்லாட்சியை தமிழகத்திற்கு அளித்த அதிமுக அரசு என்பதாகப் புதியதலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் செய்தி ஆறு ஆண்டுகள் பழைய செய்தி என்பதையும், தற்போதைய தேர்தல் களத்தில் குழப்பத்தை உண்டாக்கும் வகையிலும் தவறாகப் பரப்பப்படும் செய்தி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Puthiyathalaimurai: https://youtu.be/UsDcPT8maW0
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)