’வேல் யாத்திரை’ என்கிற பெயரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான எல்.முருகன் தலைமையில் நடைபெறும் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படாவிட்டால் தீக்குளிப்பேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

Fact check/Verification:
பாஜக தமிழகத் தலைவர் வேல்முருகன், வேல் யாத்திரை என்ற ஒன்றை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
நவம்பர் 6-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 6ம் தேதி வரையில் ஒரு மாத காலம் வேல் யாத்திரை எனும் பெயரில் இந்த சுற்றுபயணத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, எல்.முருகனின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தீ குளிப்பேன் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவ ஆரம்பித்தது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
சமூக வலைத்தளங்களில் பரவிய இச்செய்தி குறித்து அர்ஜூன் சம்பத்-தின் வலைத்தளப்பக்கங்களில் ஏதேனும் காணக்கிடைக்கிறதா என்று ஆராய்ந்தோம்.
அதன்படி, இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான பக்கம் என்று குறியிடப்பட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், இந்த செய்தி குறித்த ட்விட் ஒன்றின் கீழ் `இது பொய்யான தகவல்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
FAKE NEWS ALERT.
It's BJP doing Vel Yathra not IMK.
Originally tweeted by Indu Makkal Katchi – இந்து மக்கள் கட்சி ( Off ) (@Indumakalktchi) on November 5, 2020
மேலும், இந்து மக்கள் கட்சி சார்பில், முகப்புத்தக செய்தித்தளமான ‘காண்டீபம்’ என்பதிலும் இது பொய்யான தகவல் என்று அர்ஜூன் சம்பத் சார்பில் பதிவிடப்பட்டிருந்தது நமக்குத் தெரிய வந்தது.

Conclusion:
வேல் யாத்திரைக்கு அனுமதி கிடைக்காவிட்டால் தீக்குளிப்பதாக அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறான ஒன்றாகும் என்பதை நியூஸ் செக்கர் தமிழ் வாசகர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளோம். ஆகவே பரவி வரும் இந்தப் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Result: Fabricated
Our sources:
Facebook: https://www.facebook.com/gandeebam/posts/161765145656956
Twitter: https://twitter.com/Indumakalktchi/status/1324251578409218048?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)