Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
குன்னூரில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி இருந்த படுக்கை தவறி விழுந்தது.
வைரலாகும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
குன்னூரில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி இருந்த படுக்கை தவறி விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
”தமிழ்நாடு குன்னூரில் நடைபெற்ற சம்பவம்” என்பதாக இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரியாணியில் சாக்கடை நீரை கலந்த இஸ்லாமியர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
குன்னூரில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி இருந்த படுக்கை தவறி விழுந்ததாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருந்த சாலையில் அமைந்திருந்த இடங்களின் பெயர்கள் வித்தியாசமாக அமைந்திருந்ததை நம்மால் காண முடிந்தது. தமிழ்நாடு தொடர்பான பெயர்களும் அதில் இடம்பெற்றிருக்கவில்லை. பின்புறம் கேட்ட குரல்களும் வேற்றுமொழியாக அமைந்திருந்தது.

குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றிருந்த Toa Baja என்கிற இடம் பற்றி நாம் தேடியபோது அது Puerto Ricoவில் அமைந்துள்ளது என்பதையும் காண முடிந்தது.

மேலும், வைரல் வீடியோவில் AI Criolla PR என்கிற லோகோ இருந்ததைத் தொடர்ந்து அதை கீ-வேர்டாக எடுத்து தேடியபோது Aicriollapr என்கிற பெயரிலான AI டிஜிட்டல் கிரியேட்டர் ஒருவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த வீடியோவைக் காண முடிந்தது.
” When the ambulance goes in such a hurry in Puerto Rico and they even forget the patient… Watch the video, stunning images” என்று இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, இதே போன்று பிரிட்ஜ் வாகனத்தில் இருந்து விழுவதாக, ஏடிஎமில் இருந்து பணம் கொட்டி கொண்டே இருப்பது போன்றெல்லாம் AI மூலமாக உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளதைக் காண முடிந்தது.
Ivan Velez என்கிற இந்த நபர் ஒரு டிஜிட்டல் கிரியேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது AI உருவாக்க வீடியோவே தற்போது தமிழ்நாடு குன்னூரில் ஆம்புலன்சில் இருந்து தவறி விழுந்த நோயாளியின் படுக்கை என்பதாகப் பரவி வருகிறது.
Also Read: ‘உங்க விஜய்’ பாடலை ரசிக்கும் இயக்குநர் கெளதம் மேனன் என்று பரவும் வீடியோ உண்மையா?
குன்னூரில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி இருந்த படுக்கை தவறி விழுந்ததாக பரவும் வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post By, Nebulo Ivan Velez, Dated November 03, 2025
Self Analysis
Vijayalakshmi Balasubramaniyan
June 19, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 23, 2024