Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வாடிக்கையாளர்கள் மொபைல் செயலிகள் மூலமாக UPI முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, அது தோல்வியடைந்தால், வாடிக்கையாளர்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

தற்போது UPI பணப்பரிமாற்றம் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு வங்கி கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்ற UPI அனுமதிக்கிறது.
மொபைல் சாதனங்களில் மட்டுமே ஆப்ஸின் மூலம் பணம் செலுத்த முடியும். UPI வழியாக பணப் பரிமாற்றம் 24×7 அடிப்படையில் செயல்படுகிறது. இதனை தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI) வழிநடத்துகிறது. இந்நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது.
ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு UPI பணப்பரிமாற்றம் ஏதுவாக இருப்பதால், பெரும்பாலானோர் இம்முறையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் UPI முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, அது தோல்வியுற்றால் வாடிக்கையாளர்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archieve Link: https://archive.ph/nxXvy

Archieve Link: https://archive.ph/lA7hN

Archieve Link: https://archive.ph/Z8qVd
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
வாடிக்கையாளர்கள் UPI முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, அது தோல்வியடைந்தால் வாடிக்கையாளர்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்ததா என்பதை அறிய முற்பட்டோம்.
இதற்காக ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து ஆய்வு செய்தோம். நம் ஆய்வில் இத்தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பது நமக்கு தெரிய வந்தது.
நம் தேடலில்,
“வாடிக்கையாளர்கள் UPI பணப்பரிமாற்றம் செய்யும்போது, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டப் பின்னர் அப்பரிவர்த்தனை தோல்வியடைந்துவிட்டால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அப்பணம் வாடிக்கையாளர் கணக்குக்கு வங்கித் தரப்பிலிருந்து திரும்ப அனுப்பப்பட வேண்டும்.
ஒருவேளை காலக்கெடு கடந்தப் பின்னரும் வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப வராவிட்டால், வாடிக்கையாளருக்கு வங்கி தரப்பிலிருந்து நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.”
என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு:
இதன்படி பார்க்கையில் UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் வாடிக்கையாளர்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று பரவும் தகவல் தவறான ஒன்று என்பது நமக்கு நிரூபணமாகின்றது.
இன்னும் கூறப்போனால், இம்மாதிரியான சந்தர்பங்களில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால், ஒரு குறிப்பிட்ட காலக் கெடுக்குள் வங்கி அப்பணத்தை திருப்பி அனுப்ப வேண்டும். இல்லாவிடில் வங்கியே வாடிக்கையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்பதும் நமக்கு தெளிவாகின்றது.
வாடிக்கையாளர்கள் மொபைல் செயலிகள் மூலமாக UPI முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, அது தோல்வியடைந்தால், வாடிக்கையாளர்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Reserve Bank of India: https://www.rbi.org.in/Scripts/NotificationUser.aspx?Id=11693&Mode=0
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 9, 2025
Ramkumar Kaliamurthy
March 29, 2025
Komal Singh
January 18, 2024