Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
“மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மிகவும் பரப்பரப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் மிகவும் பரப்பாக அரசியல் பிரச்சாரங்களை செய்து வருகிறது.
பாஜகவும் இம்முறை தமிழகத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முன்பெப்பவும் இல்லாத வகையில் மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று (20/12/2020) கோயம்புத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, “மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பேசியதாக சன் நியூஸ், மதிமுகம் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊடகங்களில் வெளிவந்த இந்த செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்திக் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பாஜகவானது ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இந்நிலையில்தான் அண்ணாமலை அவர்கள் பொங்கல் பரிசு குறித்து ஆளுங்கட்சிக்கு எதிராக இவ்வாறு ஒரு கருத்தைக் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊடகங்களில் செய்தி வந்திருந்ததைப்போல், உண்மையாகவே இவ்வாறு ஒரு கருத்தை அண்ணாமலை அவர்கள் பேசினாரா என்பதை அறிய இதுக்குறித்து தீவிரமாக தேடினோம்.
அவ்வாறு தேடியதில், அண்ணாமலை அவர்கள் கோயம்புத்தூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. அவ்வீடியோவை கூர்மையாக கவனித்ததன் மூலம் சில உண்மைகள் நமக்கு புலப்பட்டது.
அவ்வீடியோவில் அண்ணாமலை அவர்கள்,
“தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்திலிருந்து தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல்”
என்று பேசியுள்ளதைக் காண முடிந்தது.
அவ்வீடியோ உங்கள் பார்வைக்காக:
அண்ணாமலை அவர்கள் பேசிய இந்தக் கருத்தையே திரித்து, “மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்ணாமலை அவர்களும் இச்செய்தி குறித்த தனது மறுப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
“மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்திலிருந்து தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல்” என்று அண்ணாமலை அவர்கள் பேசியக் கருத்தைத் திரித்து, “மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Madhimugam: https://twitter.com/MadhimugamTV/status/1340868858274488321
Annamalai IPS: https://twitter.com/annamalai_k/status/1340899320317550600
Sun News:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 14, 2025
Ramkumar Kaliamurthy
September 27, 2025
Ramkumar Kaliamurthy
September 9, 2025