கொரோனாத் தடுப்பு மருந்து டாக்டர். வி.கே. ஸ்ரீனிவாஸ் மீது முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது என்று செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

Fact Check/Verification:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்தை கோவாக்சின் எனும் பெயரில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுக்குறித்துப் பலரும் சமூக வலைத் தளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.


உண்மை என்ன?
சமூக வலைத்தளங்களில் கொரோனோவுக்கான் தடுப்பு மருந்து டாக்டர். பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை தலைவர் வி.கே. ஸ்ரீனிவாஸ் அவர்கள் மீது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என்ற செய்தி பரவியவுடன் அதன் உண்மைத் தன்மைக் குறித்து நாம் ஆராய்ந்தோம். அப்போது பாரத் பயோடெக்கின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதுக் குறித்த அறிக்கை ஒன்று நமக்கு கிடைத்தது.

அதில், வாட்ஸ்ஆப் மற்றும் மற்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படமானது, வழக்கமான சோதனைக்காக ஊழியர்களிடம் இருந்து இரத்த மாதிரி சேகரிக்கும் போது எடுக்கப்பட்டது என்றும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. மேலும் மக்களின் நலத்தை மனதில் கொண்டு கோவிட்-19க்கு எதிராக பாதுகாப்பாக மற்றும் திறம்பட பலனளிக்கும் ஒரு தீர்வுக்காக இந்நிறுவனம் தொடர்ந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Conclusion
எங்களின் விரிவான ஆய்வுக்குப் பின் டாக்டர். வி. கே. ஸ்ரீனிவாஸ் அவர்கள் மீது கொரானாத் தடுப்பு மருந்து சோதனை நடத்தப்படவில்லை என்றும் அது ஊழியர்களிடம் இரத்த மாதிரி சேகரிக்கும் வழக்கமான சோதனை என்பதும் உறுதியாகியுள்ளது. ஆகவே இதுக்குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியானது முற்றிலும் தவறானது என்று உறுதியாகிறது.
Result: False
Sources:
- Google search
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)