Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்று சங்கரன் கோவில் அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக கட்சி பாமக, பாஜக, தாமக ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக சந்திக்கவிருக்கின்றது. இக்கூட்டணியில் சங்கரன் கோவில் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராஜலட்சுமி அவர்களே இம்முறையும் போட்டிடுகின்றார்.
சங்கரன் கோயில் தொகுதியை பொறுத்த வரை அது அதிமுகவின் கோட்டையாகும். 1980 முதல் 2011 வரை நடைப்பெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக சார்பில் நிற்க வைத்தே வேட்பாளர்களே இதுவரை வென்றுள்ளனர். இந்த வெற்றி சரித்திரத்தை நிலைநிறுத்த ராஜலட்சுமி அவர்கள் மிகத் தீவிராமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
அவ்வாறு இவர் வெள்ளப்பனேரி பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும்போது, “இன்னும் 2 மாதங்களில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும்” என்று கூறியதாக நியூஸ் 7 தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link:https://archive.ph/N4q4F
Archive Link: https://archive.ph/ATvRr
Archive Link: https://archive.ph/Nwaki
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்று ராஜலட்சுமி அவர்கள் கூறியதாக நியூஸ் 7 தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 7 தொலைக்காட்சியில் வந்துள்ளதா என்பதை நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
நம் தேடலில் இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 7 தொலைக்காட்சியில் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தித் துறையினரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்கள்,
“இதுத் தவறான செய்தி. இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை”
என்று நமக்கு பதிலளித்தனர்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும் என்று ராஜலட்சுமி அவர்கள் கூறியதாக பரவும் தகவல் பொய்யான ஒன்று என்பது நமக்கு தெளிவாகின்றது.
Conclusion
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்று சங்கரன் கோவில் அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி கூறியதாகப் பரப்பப்படும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News 7 Tamil:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.