மொயின் அலி கோரிக்கையை ஏற்று ஐபிஎல் போட்டிக்கான புதிய ஜெர்சியில் இருந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் மதுபான நிறுவன லோகோவை நீக்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலானது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14 ஆவது சீசன் இன்று துவங்குகிறது. இப்போட்டியில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஆல்ரவுண்டரான மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது சிஎஸ்கே.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான சிஎஸ்கே வீரர்கள் அணிவதற்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்க்ஸ். அதில், SNJ 10000 என்னும் மதுபான நிறுவன லோகோ ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
இச்சூழ்நிலையில், தனது மதம் சார்ந்த நம்பிக்கைகளால் சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து மதுபான நிறுவன லோகோவை மொயின் அலி நீக்கக் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை சிஎஸ்கே கிரிக்கெட் அணி உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் வைரலாகியது.

Archived Link: https://archive.ph/EMmBR
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மொயின் அலி கோரிக்கையை ஏற்று மதுபான நிறுவன லோகோ சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து நீக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை ஆராய்ந்து பார்த்தோம்.
அப்போது, சென்னை சூப்பர் கிங்க்ஸின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாத், இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த விளக்கம் நமக்குக் கிடைத்தது. அதில் அவர், “மொயின் அலியால் அதுபோன்று எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. பரவும் செய்தி தவறானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திலும், ஜெர்சியிலும் அந்த லோகோ இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
மொயின் அலி கோரிக்கையை ஏற்று மதுபான நிறுவன லோகோ சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து நீக்கப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
CSK: https://www.chennaisuperkings.com/CSK_WEB/index.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)